Tags

, ,

                                                                  
இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை நிகழ்வு….
ஒரு தொழிநுட்ப மாணவனுக்கும், முகமறியா பெண்ணுக்குமான விந்தையான உறவு.
கல்லூரி மாணவர்களிடம் அலைபேசி அறிமுகமான காலம்.நாயகன் தேர்வு முடிந்து கோவையிலிருந்து சென்னை வந்திருந்தான், தவறுதலாக ஒரு பெண்ணின் எண் கிடைத்து அறிமுகமாயிருந்தது. முதலில் குறுஞ்செய்திகளாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணுடன் பேச ஆரம்பித்தாயிற்று. கல்லூரியில் கண்ட காட்சிகள், ராணுவத்தில் பணிபுரிந்த தந்தையின் அதீத கண்டிப்புகளால் வித்தியாசமான குரூர சிந்தனைகள் விதையூன்ற ஆரம்பித்து விட்டிருந்தது.சிறந்த குடும்பம் மற்றும் பல நிர்பந்தங்களால் மரியாதையாக நடித்து வந்தான், அலைபேசியில் அவளிடம். பல நாட்களாக பேசி, மெல்ல மெல்ல சகஜமாகிவிட்டது இருவருக்கும். ரகசியங்கள் பகிரவும், தன்னைப்பற்றிய விபரங்களை தெரிவித்துக் கொள்ளவும்.
பரஸ்பரவிபரங்கள் விபரங்கள் தெரிவித்துக்கொண்டதில் சற்று அதிர்ச்சி அவனுக்கு. ஆம், அந்த பெண் அவ்வளவாக படிக்காத, தினக்கூலி செய்யும் 20 வயது பெண். ஆனால் நமது கதாநாயகன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, அவனது எண்ணம் வேறல்லவா? இவளது தொடர்பை(!?!?) அதற்கான பரிசோதனைக்காக உபயோகிக்க அவனது முயற்சிதான்.ஒரு வழியாக அந்த பெண்ணிடம் நேரில் சந்திக்க கேட்டாயிற்று, ஆரம்பத்தில் சற்றே பிடிகொடுக்காமல் பேசியவள், தொடர் வற்புறுத்தல் மற்றும் அவனது பேச்சுத்திறமையால் வீழ்ந்துவிட்டாள்.
ஒரு வார இறுதியில் அவன் டவர் பார்க் வரச்சொன்னான், அது அவனது வீட்டுக்கு சற்றே அருகில். ஆனால் அவளோ “வேண்டாம், மெரினா கடற்கரைக்கு வாங்க, பேசுவோம்” என்றாள். இவனுக்கு உள்ளூர சந்தோசம் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல், மெலிதாக கோபித்துக்கொள்வது போல் நடித்து “சரி “என்றான்.
சென்னை இளைஞர்களுக்கே உரித்தான ஜீன்ஸ், டீ சர்ட் சகிதமாக அட்டகாசமாக முதல் ‘டேட்டிங்’ க்கு தயாரானான் அந்த ஞாயிறு மாலை.
பைக்கில் போகும்போது பல பாடல்களை மனதுக்குள் ஒலிக்கவிட்டு ‘மிதந்து’ கடற்கரையை அடைந்தான். சென்னை மெரினா கடற்கறை, ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரை, நமக்கோ காதலர்களுக்கான மிகப்பெரிய களிப்பிடம். அவளை அழைத்தான் அலைப்பேசியில், அவள் வந்து சேரவில்லை, சற்றே பதற்றம்.கற்பனையில் யூகிக்கத் தொடங்கியாயிற்று அவளைப்பற்றி, அப்போதைய கனவுநாயகிகள் நினைவில் வந்து போயிற்று. மறுகணம் மணி அழைப்பு, “எங்க இருக்க?” என அவன் கேட்க, இப்பொழுது பறக்கும் குதிரை இருக்குமிடத்தை கூறினாள். ஆசுவாசப்படுத்தி கொண்டு அடையாளம் கேட்டான், கேட்டு அங்கே சென்றான். சற்று தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது, கிளிப்பச்சை கலர் சுடிதார், பஞ்சுமிட்டாய் கலர் கீழங்கி, பூசுமஞ்சள் நிற துப்பட்டா. அவள் நிறமோ திராவிட நிறம். மனதைத்திடப்படுத்தி அருகில் சென்றான். அப்போது அவன் மனதில் தோன்றியது,’கோழி குருடா இருந்தா என்ன? கொழம்பு ருசியா இருந்தா சரிதான்’ நிலை.
அந்த பெண்ணை அழைத்து கொண்டு கடற்கரை உட்பகுதி சென்று கடலை நோக்கி ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தனர். தலைக்கவசத்தை தன்னருகே வைத்து அவளை நோக்கினான்,கருப்பா இருந்தாலும் கலையாகவே தெரிந்தாள். இருவருக்கும் இடைவெளி நான்கு அடி. வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்தாயிற்று. அவளருகே செல்ல இடைவெளி குறைக்க எண்ணி அருகே சென்றான். அவள் சற்று தள்ளி அமர்ந்தாள். பேசிக்கொண்டே அவன் அருகே வருவதும், அவள் தள்ளி அமர்வதுமாகவே அரைமணி நேரம் தொடர்ந்தது. ஹீரோவ பொறுமையிழந்தார், ” ஹலோ ஏன் தள்ளி தள்ளிப் போறிங்க?”, னு கேட்க,
அவள் வித்தியாசமான லுக் விட, “அட ஆமா, அதுக்கு தான் வந்தேன், சொம்மா தள்ளிப்போனா என்ன அர்த்தம்?” என்றான். அவள் அதற்கு,” என்ன இப்படி பேசறீங்க? நான் நல்ல ப்ரண்டாதான் நெனச்சேன்”,என பதிலளித்தாள்,சற்றே மிரட்சியுடன்.
“ப்ரண்ட்டா, புல்ஷிட், எனக்கு ஆயிரம் ப்ரண்ட் இருக்காங்க, இவ்ளோ கஷ்டப்பட்டு உங்க கூட நட்பாக அவ்ளோ என்ன ஸ்பெசல் இருக்குங்க, ப்ராக்டிக்கலா பேசுவோம்.இல்லனா நான் கெளம்பனும்”, சொல்லி விருட்டென்று எழுந்தான். அவளும் மறு பேச்சின்றி எழுந்தாள். தலைக்கவசத்தை தேடியவனுக்கு அவமானம் பிடுங்கிதின்றது, ஆம், அது எங்கோ நூறு அடி தூரத்தில் இருந்தது. சட்டென்று எடுத்து கொண்டு விருட்டென்று நடக்க ஆரம்பித்தான், இவ்வளவு நாள் முயற்சி வீணாயிற்றே, அதுவும் மொக்கை ஃபிகர் கடுப்பேத்திட்டதேனு.
“என்னை மூலக்கடைல விட்றீங்களா,?” என அவள் நிறுத்தி கேட்க, அண்ணாநகரில் வீடிருந்தாலும் வேறு வேலை தி.ந்கர் வரை நோக்கி போகவேண்டி இருக்குனு விடை பெற்று பைக்கை நோக்கி நடந்தான் , வெறுப்புடன்.
அன்றோடு முகமறியா பெண்ணுக்கு குறுஞ்செய்தி, தேடிப்பிடிப்பதையும் நிறுத்தியாயிற்று.
இது எதுக்கு எழுதினேன் தெரில,
அவன் கூறியவற்றில், ” உன்னிடம் என்ன ஸ்பெசல் , தேடி வந்து ப்ரண்டாக?”, உறுத்தியது அப்போது. உண்மையாக தோன்றியது,இப்போது. நட்புனு சொல்லிட்டு நடக்கும் பல அசிங்கங்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் ஒரு காரணமோ? இருக்கலாம்.
தலைப்பு, பொருந்தலனா பிரச்சனை இல்ல! இந்த நிகழ்வுக்கும், இப்போதைய நிகழ்வுகளுக்கு இது தான் சட்டென்று தோன்றியது. ஆம், “You can’t be just friends, when u love someone”,
u can’t be a friend when you can’t love someone”.
இப்படித்தான் பல நிகழ்வுக்கு தத்துவங்களை கூறி ஏதோ சமாளிச்சிக்கறோம்னு தோணிச்சி.
நன்றி.
பி.கு: இதை சம்பந்தப்பட்டவங்க பாக்க வாய்ப்பில்ல, மேலும் ஒரு கேரக்டர் உருவகம் சற்று கற்பனை கலந்தது. மற்றவை அனைத்தும் சிங்காரச்சென்னையில் அரங்கேறியதுதான். இது மாதிரி நிறைய பாத்ருப்பீங்க, சென்னை உள்ளவர்களை பற்றி உயர்வாக நினைத்திருந்த ஒரு கிராமப்புற இளைஞனின் மனநிலை பிரதிபலிப்பு.

Advertisements