Tags

,

அப்பா,
இந்த ஒரு வார்த்தை எல்லோருக்கும் ஆனந்தத்தையும், ஒரு சிலருக்கு ஆதங்கத்தையும் அளிக்கவல்லது.
ஆம், இங்கு நான் எனது தந்தையை பற்றி எழுத விழைகிறேன்.
வாழ்க்கை என்ன என்பதை உணர வைத்தவர்.
ம்ற்ற்வரை மகிழ செய்து இன்பம் கானும் கலையை கற்றுக்கொடுத்தவர்.
தான் எனும் என்னத்தை உடைக்க வைத்தவர்.
பச்சசிளம் குழந்தைக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுதவர்.
இன்றுவரை மனைவி,மகள்,தங்கை,ஏன் எதிர் வீட்டு இரண்டு வயது பெண் குழந்தையைகூட “சொல்லுமா” என்று மரியாதை கொடுப்பவர்.
பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர்.
இன்றும் எந்த ஒரு பெண்ணையும் ‘டி’ போட்டு அழைக்க முடியாமல் என்னை செய்தவர்,இகழ்பவரை கூட.
ஏனோ தெரியவில்லை,பல நினைவுகள் பட நிகழ்வுகளாக என் மனத்திரையில்….
Image
என் அப்பா தனது அப்பாவை சிறு வயதில் இழந்தவர்.ஐந்து வயது இருக்கும்போது என்று சொன்ன நியாபக‌ம்.சற்றே வசதியான குடும்பம் தான், படிப்பறிவு இல்லாத காரணத்தினால் பல சொத்துகளை தவறவிட்டுள்ளார் என் தாத்தா. சிறு வயதில் கஷ்டங்களை தவிர என் தந்தை அனுபவித்தது இல்லை.
ஆறாம் வகுப்பு விடுதி சேர்ந்து ஒரு அரைக்கால் சட்டையும் , மெல்சட்டையுடன் படித்த காலத்தை என் உறவினர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.
ஒரு சோடி உடையை உலர்த்த வெறும் துண்டுடன் விடுதி அறையில் கத்து இருந்ததை தலையணை கதைகளாக கண்ணீருடன் சில சமயம் அவர் கூறவும்.காற்சட்டையின் கிழிசல் மறைக்க பெரிய சட்டையை வெளியில் விட்டு சென்றவராம்.இன்று பல இளைஞர்கள் முடியழகாம், நீள சுருல் முடியழகு (பெண்களை போல) அதை 1960களிலே வைத்திருந்தார், என்ன, காரணம் முடி வெட்டி கொள்ள காசு இல்லை அவ்வளவே!
பல சிரமங்களுக்கு இடையே மிகுந்த போரட்டத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து, ஒரு வேலை வாங்கி சொந்த கிராமத்தில் இருந்து தொழில் நகரம் கரூருக்கு வந்தார்.
பள்ளி வாழ்க்கையில் குடும்ப சூழலுக்கு நடுவே என்னால் அவர் மகிழ்ச்சியாய் இருந்தார் என்பது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.அப்பொழுது நான் முத‌ல் வகுப்பு காலாண்டு தேர்வில்,ஆறாவது ரேங்க். இன்றும் நினைவில் இருக்கிறது, ஒரு முறை கூட படி என்று அவர் கூறியதில்லை.”நான் படிக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு சொல்லிருக்கேன். உங்களுக்கு என்ன தோனுதோ பண்ணிக்கோங்க”, இது மட்டும் தான் என்னிடம் சொன்னது. அதன் பிறகு படிக்க, இல்லை இல்லை வகுப்பில் சற்றே கவனிக்க ஆரம்பித்தேன், கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இரண்டாம் வகுப்பில் முதல் ரேங்க் பிடித்தேன்.அப்பொழுது தர அட்டையில் கையொப்பமிடும் பொழுது அவர் முகமலர்ச்சி இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது.அதன் பிறகு ஒரே ஒரு முறை தான் இரண்டாவது ரேங் எனது பள்ளி வாழ்கையில்.அதும் ஒரு மதிப்பெண்ணில். அதற்கு ஒரு வாரம் அழுதது வேறு கதை!
இன்றுவரை அவர், இவரிடம் பழகு, இவரிடம் பேசு, இதை செய்,அதை செய்யாதே என்று எனக்கு அறிவுரை கூறியது இல்லை. “தம்பி உன் மேல‌ எனக்கு நம்பிக்கை இருக்கு,நீ எது பண்ணாலும் நல்லதாவும், நல்லாவும் இருக்கும்னு நம்பறேன்”. இது தான் அவர் எனக்கு பண்ணின‌ அதிகபட்ச‌ அறிவுரை.
என் சிறு வயது முதல் அவர் தனக்கென எதும் செய்து நான் பார்த்தது இல்லை, அனைத்தும் தனது பிள்ளைகளுக்காக‌ மட்டுமே. அவர் எங்க‌ளுக்கு கொடுத்த சுதந்திரம் வேறு வீட்டு பிள்ளைகளை பார்க்கும் போது தான் தெரிந்தது. எனது ஊரில் அவரை பற்றி ஒரு சிறு தவறான பேச்சு கூட யாரும் பேசி கேட்டதில்லை, எங்கள் குடும்பத்தை பிடிக்காதவர்கள் கூட.
“எனக்கு உன்ன மாதிரி ஒரு அப்பா கெடைக்கலைன்னு வருத்தமா இருக்கு” நான் அடிக்கடி கேட்ட வார்த்தை எனது பள்ளி பருவத்தில். ஒவ்வொரு நொடியும் தனது வீட்டையும்,மக்களை பற்றி மட்டுமே எண்ணி வாழ்ந்தவர். எனது ஒவ்வொரு உயர்விலும் அவர் அடைந்த மகிழ்ச்சி எனக்கு சற்றே உறைக்க  வைத்தது பல விஷ‌யங்களை.
கல்லூரி சேர்வதற்கான கலந்தாய்வுக்கு என்னுடன் வரவில்லை, பதற்றமாம்,ஒரு சின்ன பையனை போல,அவ்வளவு ரசித்தேன்.முடித்து வந்து சொன்னதும்,அவர் உயரதிகாரியிடம் போய் கம்பீரத்துடன் என் பையன் இந்த காலேஜ்னு பெருமிதத்தொடு சொன்ன போது,ரொம்ப பெரிய சாதனை பண்ணின சந்தோஷம்,எனக்கு.
அதன் பிறகு தொலைப்பேசி உரையாடல்களில் வாழ்க்கை. ஆனாலும் அவர் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு துளி கூட குறைந்ததாக நான் உணரவில்லை.தமிழகத்தில் சிறந்த கல்லூரியில் படித்தபொழுது ஆகட்டும், சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது ஆகட்டும், நான் அவருடன் இருக்கையில் யாரும் விசாரித்தால் நான் அமைதி காப்பேன், காரணம் அதை சொல்லும் போது அவர் காட்டும் உற்சாகம்,மகிழ்ச்சி வார்த்தைகளில் வடிக்க‌ முடியாது.

எனது குடும்பம் நடுத்தரமானதா, ஏழ்மையனதா என்பது எனக்கு கல்லூரி வரும் வரை தெரியாது.இன்று வரை தனது சம்பளம் எவ்வளவு என்று சொன்னதுமில்லை,எதுவும் வேண்டுமென்று என்னிடம் கேட்டதுமில்லை.ஆம், எங்களது குடும்பம் நடுத்தர வர்க்கத்ற்கு சற்றே கீழ் தான்.ஆனால் என்னை உணரவிட்டதில்லை. சொல்ல போனால் அந்த ஒரு காரணம் தான், நான் சற்று பொறுப்புடன் இருந்ததற்கு கூட. தனக்கு வேண்டியதை தானே சம்பாதிச்சு தானே வாங்கனும்ங்கறது.

அவரது கடமைகளாம்; தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுத்தாகிவிட்டது.எனது அக்கா,தம்பி இருவருக்கும் மணமுடித்தும் விட்டாகிவிட்டது. இனி என்னால் முடிந்தது அவரது பணி ஓய்வுக்கு பிறகு அவரது கிராமத்தில் தோட்டவீடு, பசுமையான சூழல்.அதை கொடுக்க வேண்டும்.
எனது ஒரே ஒரு விருப்பம், என்னால் இனியொருமுறை அவரை கண்ணீர் வடிக்க வைத்துவிட கூடாது அவ்வளவு தான்.ஆம், ஏதோ சில காரணங்களினால் அவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,விரைவில் மன்னிப்பு கேட்டு அவரிடம் சேர கூடும்.அவர் மன்னித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு, மன்னிப்பு கேட்க மனம் இன்னும் எனக்கு வரவில்லை.
அந்த நாளுக்காக,
*‍‍‍‍பெரிய தம்பி*
Image
இது எனக்காக,என் ஆத்ம திருப்திக்காக‌ எழுதிகொண்டது. ஒரு தந்தையை பிரிந்து இருக்கும் ஒரு மகனின் கடிதம் போன்றது. இதை என்னால் அனுப்பவோ இல்லை *தந்தையர் தின வாழ்த்து* சொல்லவோ முடியாத நிலை. ஏனோ இதில் பெரிதாக கோர்வையையோ ,அழகையோ எதிர்பார்க்கவில்லை.சற்று உணர்ச்சி மிகுதியில் என்ன தோன்றியதோ எழுதிவிட்டேன். பிழைதிருத்தம் செய்யவில்லை, செய்யவும் விரும்பவில்லை.

Pic courtesy:

http://theberry.com/2010/01/11/theres-just-something-about-a-fathers-love/dads-love-15/

http://prabhuvelappan.weebly.com/

 

Advertisements