Tags

, , , ,

இசையின் நாயகன் இளைய ராஜாவுக்கு சமர்ப்பண‌ம்!!!!

raja

இசை தமிழ், நீ செய்த‌ அருட்பெரும் சாதனை, நீ இல்லயேல் எனக்கு பெரும் சோதனை. எவ்வளவு உண்மையான வரிகள் அவரது புகழ் பாட!

நான் ஒன்றும் மனிதனை கடவுளாக பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவன் இல்லை. இருப்பினும் இவரை பற்றி எழுத விளைகிறேன்.

இப்பூவுலகில் எத்தனையோ இசை நாயகர்க‌ள் தோன்றி, மறைந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ள‌னர். அவர்களில் தமிழறிந்த மக்கள் மனதில் என்றென்றும் நீங்க‌ இடம் உண்டு இந்த தவப்புதல்வனுக்கு!

ராஜா இசை உலகின் முடி சூடா மன்னன், மொட்டை தலையன் என்பவரை விட்டொளியுங்கள்.இவ்வுலகம் இப்படிதான்.வாய்பேச்சு வல்லவர், வாத‌ திற‌மை அற்ற‌வர். ஆம்,ஏன் இருந்து விட்டு போகட்டும்.புகழ் போதை இல்லா மனிதர் யாருண்டு, இதற்கு ஏன் உங்கள் கடவுள்கள் கூட‌ விதி விலக்கன்று!!!

திரை துறையை எடுத்துக்கொள்வோம்,ஒரு படத்தில் நல்ல பாடல்களை கொடுத்துவிட்டு அடுத்த பீத்தோவ‌ன் நான் என்று பீற்றுபவர் எத்தனை பேர்.? ஒரு ஹிட் கொடுத்து பிறகு அடுத்த ஆஸ்க்கார் எனக்கு என்று அல‌ம்பல் செய்வோர் எத்தனை பேர், இவர்களை போன்று அன்றி இசையை மதியுங்கள், கொச்சை படுத்தாதீர் என்று கேட்பதால் திமிர் பிடித்தவனெனில் ,ஆம் கண்டிப்பாக !

கம‌ல்,ரஜினி,அஜித்,விஜய் முதல் ஏன் நேற்று வந்த துக்கடா சிறுவர் செய்யும் அட்டகாசத்தை பார்க்கையில் இப்பேச்சு ஒன்றுமே இல்லை.
அவர் பேசுவது அதிக பிரசங்கி தனம் இல்லை , அனைத்தையும் சாதித்து விட்ட செறுக்கு. ஒன்றுமே அறியா வயதில்  இந்த வயதில் நமக்கே  இவ்வள‌வு முறுக்கென்றால் எவ்வளவோ பார்த்து விட்ட அவருக்கு ஏன் இருக்க கூடாது!

மிகச்சிற‌ந்த இயக்குனர்களை,பாடல்களுக்கென வெற்றியடைந்த படங்களை நாம் பார்க்கவில்லை,இவரது இசையின் கருணையால் மட்டும்.
பச்சை குழந்தை தொடங்கி, பாழும் கிழ‌ம் வரை அவரது பாட்டுக்கு அடிமையாக‌ இருப்பதை மறுக்க,மறைக்க‌ முடியுமா?

மணிரத்தினம்: அவர் வெற்றி பெற்ற‌தற்க்கு ராஜாவின் பங்கு முக்கியமானது. சிறு உதாரண‌ம்.
“சின்ன தாயவள் தந்த ராசாவே ”
அடுத்த வரி அடிக்க இயலவில்லை. கண்ணீர் முட்டும்.
தாயன்புக்கு இதை விட வேறு பாடல் கூறுங்களய்யா!

உங்களது வாழ்வின் ஒவ்வொறு தருணத்திலும் இரண்டற‌ கலந்து விட்ட அவரது இசையை ரசியுங்கள் போதும்.

இசையின் மடியினில் அனைவருக்கும் தாலாட்டாய், அழும் குழந்தைக்கு சீறாட்டை,பள்ளி செல்லும் பொழுது பாராட்டாய், பருவத்திலே காதல் களியாட்டமாய், மண வாழ்க்கையில் மங்களமாய்,முதிர்ச்சியில் போது முத்தாரமாய்,எல்லாம் முடிந்த பிறகு முராரியாய்! மறுக்க இயலுமா?! இது ராஜாவின் சாதனைகளில் ஒப்பற்ற‌து.எந்த ஒரு இசை கலைஞனாலும் அல்ல எந்த துறை கலைஞனாலும் சாதிக்க இயலுமா என்பது அய்யமே!

ஒரு சிறு ஹார்மோனியதுக்குள் நம் ஹார்மோன்களை கட்டிபோட்ட கலைத்தாயின் புதல்வனுக்கு எனது வாழ்த்துக்கள்.
விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கல‌ந்த இசையே, அவனது சாதனை!
எத்தனை பேரினது கண்ணீரில், மகிழ்ச்சியில் உற்சாகத்தில் துணை நின்ற‌வன். _/\_

இன்னும் எத்தனையோ உதாரணங்களை கூற தோன்றுகிறது, அவனுக்கு . பல்லாண்டு வாழ்ந்து இசை தொண்டு புரிந்தால் போதும் எம் போன்ற‌ இசை பிரியர்களுக்கு!!!

” ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜ‌
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா ! ”

என்றும் ராஜாவின் புகழ் பாடும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன், இந்த சிறுவன்.

நன்றி.

ஓவியம் * http://i.ytimg.com/vi/T71jHjIvEAI/0.jpg *

Advertisements