Tags

, , , ,

விழிகளில் வழிந்தோடும் நீருடன் இதை எழுதுகிறேன்.

எனது நண்பர்களுக்கு. எனக்கு தெரியாது உங்களில் எத்தனை  பேர் எப்படி இருப்பீர்கள் என்று? ஆம் . ஆணா ? பெண்ணா ? கருப்பா ? சிகப்பா ? உண்மையான பெயரா,  இல்லையா என்று. அதை பற்றி நான் கவலையும் படவில்லை.! உங்களுடன் பழகிய நாட்கள் மிக குறைவே , ம்ம்ம்.. மிக மிக குறைவு.

இதை நான்  எழுதுவதற்கு பெரிய காரணம்   இல்லை., இல்ல இருக்கு!!! எனக்கு ஆயிரம் நண்பர்கள் , ஒரு இன்ஜினியரிங் அதுவும் ஐ.ஐ .டி மாணவனுக்கு சற்று அதிகம். தற்போது நான் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்த்தால் என்னாலே நம்ப முடியவில்லை. நான் இந்த உலகில் இருப்பதையே ! நான் மட்டும் தனியே பயணித்து  , அழுது  துடித்தது இன்னும் ஆறாத வடுவாக உறுத்துகிறது. ஆறு மதங்களுக்கு மேல் ஆகி விட்டது ஆம் நான் சிரித்து , யாருடனும் பேசி.
அதற்காக நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்ப வில்லை.ஏனெனில் அதற்கு காரணமானவர்கள் இன்னும் இதே ஊரில் முன்பு போலவே நடித்து கொண்டு இருக்கிறார்கள், உலகத்திற்கு பொய்யாக முன்பு போலவே தொடர்கிறார்கள் ! என்ன, இப்போது அதில் கொஞ்சம் தத்துவங்களை சேர்த்து கொண்டு !  அதனால் எந்த உபயோகமும் இல்லை. கடந்து விட்ட நினைவுகளாக,வடுவாக !!

மன்னிக்கவும் , இப்பொழுது உண்மையாக நான் பெருமைபடுகிறேன் இந்த சில காலத்தில் உங்களுடன் இருக்கையில் சற்றே நிம்மதி பெரு மூச்சு  விட்டு கொண்டு இருக்கிறேன்.
இது இரண்டாவது முறை நான் மருத்துவமனையில் இருந்தது. ஆம் , இவ்வாண்டு துவக்கம் முதல் முறை.  அப்பொழுது எனது முட்டாள் தனத்தினால் தற்பொழுது  அந்த முட்டாள் தனத்தின் தாமதமான விளைவினால்.!
அன்று இருந்தபோது என்னை தாங்கி பிடிக்க வேண்டியவர்கள் , எதை பற்றியும் கவலை இன்றி கடற்கரையினில் மகிழ்ந்து திரிந்ததை பார்த்தேன். ( மன்னிக்கவும் பல விசயங்கள் கூற விரும்பவில்லை). நான் மருத்துவமனை செல்ல காரணமானவர்களுக்கு வருத்தம் என்னவென்றால் இதனால் அவர்களுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று ?  அந்த எண்ணம் மிக மேலோங்கி இருந்தது. இவையெல்லாம் சில காலங்கள்   கழித்து நான் அறிந்து கொண்டவை .

எதோ உளறுகிறேன் இல்லை , சில நல்லவைகளை  சொல்ல சில தீமைகளை சொல்ல வேண்டி இருக்கிறது. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் அது போன்று!

தொடர்கிறேன். ஆனால் சில நாட்களே நான் அறிந்த Twitter நண்பர்கள் காட்டிய அக்கறை  உண்மையாக தனிமை சிறையில் தவிக்கும் என்னை அழ வைத்தது , ஆனந்தத்தில் !! பல நாட்கள் கழித்து.!  ஆம், முன்பு நான்

சொன்னதற்கு வெறுத்தார்கள் என்னை, எனக்கு அறிந்த நண்பர்கள் . இன்று சொன்ன சில வினாடிகளில் நடந்தவைகளை பார்த்தேன் , சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு இப்பொழுது. பரிவு , அது போதும். இது என்ன பெரிய விஷயம். சும்மா Tweet பண்ணினேன், பக்கத்துல இருக்கறவங்களுக்கு.எனக்கு என்ன ஆனது என்று,  இல்லை,  என்னை பற்றி சில வினாடிகள் பேச யாராவது இருகிறார்கள் என்று தெரியும் போது எதோ ஒரு நம்பிக்கை பிறக்கிறது .

உண்மையான முகம் தெரிந்த எனது நண்பர்களின் பொய்யான நட்பினால் இந்த வலியோடு இருக்கும் நான், முகமே அறிந்திடாத போலியான (மன்னிக்கவும்) பெயர்களோடு உண்மையான நட்போடும், பரிவோடும் இருக்கும் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்  ஆம் முழு மனதுடன்  நான் இதனை எழுதி முடிக்கிறேன் .  _/\_

குறிப்பு :

இதை ஆங்கிலத்தில் எழுத நினைத்தேன் ஆனால் உங்களில் பலர் தமிழ் பற்றில் சிறந்தவர்கள் என்பதால் சற்று சிரமப்பட்டு எழுதி விட்டேன். எனக்கு தமிழ் தெரியாது என்று அல்ல தமிழை கணினியில் எழுதி பழகாதனால்.! சற்று வலி , அது இன்பமாக இருந்தது.

எனக்கு தெரியும் உங்களில் பலர் இதை பார்த்து கலாய்த்து விட்டு, ஏன் வெட்டி செண்டி என்று போகலாம் , ஆனல் எனக்கு அப்படி இல்லை . மறுமுறை _/\_ .

  நன்றி…..

Advertisements